
Thalapathy 63 Update : தளபதி 63 படத்தின் நிலை என்ன என்பது தயாரிப்பாளர் வெளியிட்ட புகைப்படத்தால் தெரிய வந்துள்ளது. இதனால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
தமிழ் சினிமாவின் தளபதியான விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் படத்தை அடுத்து அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.
AGS நிறுவனம் தயாரிக்க நயன்தாரா நாயகியாக நடிக்க உள்ளார். ஏ .ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். விவேக், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.
சமீபத்தில் இப்படத்திற்கு செட் அமைக்கும் பணிகள் பூஜையுடன் தொடங்கி இருந்தன, இதற்கிடையில் தற்போது அட்லீ படப்பிடிப்பிற்காக இடங்களை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
இதற்கு அட்லீ தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணுவுடன் இணைந்து கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல் நகருக்கு சென்றுள்ளார்.
அங்கு மூவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
From Kollywood to Hollywood #Thalpathy63 @atlee47 @gkvishnu with my #colorKanadi ????????