Thalapathy 63 Tamilnadu Theatrical Rights :
தளபதி 63 படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் பிரபல ஸ்கிரீன் சீன் நிறுவனம் இந்த உரிமையை வாங்கவும் போட்டி போட்டு வருகிறது.
‘இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர்.
திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.
தளபதி 63 பிளாஷ்பேக் குறித்த ரகசியத்தை உளறிய பிரபல நடிகர்!
தனது தந்தையின் கரம் பற்றி திரை துறையில் காலடி எடுத்து வைத்தாலும், அதன்பின் தனக்கான பாதையை தனது விடாமுயற்சியால், தானே அலங்கரித்து இன்று ஆளப்போறான் தமிழன் என எல்லைகளை கடந்து வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மெர்சல் சர்க்கார் ஆகிய இரண்டு படங்களுமே வசூலில் மிகப்பெரிய சாதனைகளை புரிந்தது குறிப்பாக தமிழகத்தில் இவ்விரு படங்களும் 70 கோடிக்கும் அதிகமாக ஷேர் மட்டுமே கொடுத்தது.
இது தமிழில் வேறு எந்த நடிகரும் செய்யாத மிகப்பெரிய சாதனையாகும் இதனால் இவர் நடித்துவரும் தளபதி 63 படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் பிரபல ஸ்கிரீன் சீன் நிறுவனம் இந்த உரிமையை வாங்கவும் போட்டி போட்டு வருகிறது.