Actor Soundararaja Talks about Thalapathy 63 | Vijay | Nayanthara | Kollywood | Tamilcinema | Latest Cinema News | Thalapathy Vijay

Actor Soundararaja Talks about Thalapathy 63 :

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

அரைகுறை உடையில் எமி ஜாக்சன் – வைரலாகும் புகைப்படம்!

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படத்தின் படப்பிடிப்பு ஈ.சி.ஆரில் இருந்தே உள்ளே வந்து தற்போது சிட்டிக்குள் நடைபெற்று வருகிறதாம்.

Actor Soundararaja Talks about Thalapathy 63 | Vijay | Nayanthara | Kollywood | Tamilcinema | Latest Cinema News | Thalapathy Vijay

இதுஒருபக்கம் இருக்க இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சௌந்தரராஜா இப்படம் குறித்து அண்மையில் பேசியுள்ளார்.

அதில், தான் இப்படத்தில் மொத்தம் 6 காட்சிகளில் வருவதாகவும் அதில் 2 காட்சிகள் பிளாஷ் பேக் காட்சிகள் என்றும் கூறியுள்ளார். மேலும் தெறி படத்தை விட இந்த படத்தில் தனக்கு நல்ல வாய்ப்பு என்றும் அவர் கூறியுள்ளார்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.