
Thalapathy 63 Movie : தளபதி 63 படம் குறித்து கிடைத்துள்ள தகவலால் விஜயின் அடுத்த படம் இந்த படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி இருந்த சர்கார் படத்தை அடுத்து தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கி இருந்த அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
AGS நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் அறிவிப்பு பற்றிய போஸ்டரில் Excepted and Unexcepted என்ற சுலோகன் இடம் பெற்றிருந்தது.
இதே வசனம் தளபதி விஜய் நடிப்பில் கே.எஸ்.ரவி இயக்கத்தில் வெளியாகி இருந்த ஷாஜகான் படத்தின் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.
இதனால் இந்த படத்திற்கும் தளபதி 63 படத்திற்கும் ஏதாவது கனெக்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் நெட்டிசன்கள் ஒரு வேளை ஷாஜகான் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமோ எனவும் பேசத் தொடங்கியுள்ளனர்.
ரசிகர்களின் இந்த கேள்விக்கு படக்குழுவினர் தரப்பில் இருந்து என்ன பதில் வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.