Thalapathy 63

Vijay 63 Details : தளபதி 63 படம் குறித்து பரவிய தகவலுக்கு அது வெறும் வதந்தி என கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிரபல நடிகர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க கதிர், விவேக், யோகி பாபு, ஆனந்த் ராஜ், டேனியல் பாலாஜி, ரோபோ ஷங்கரின் மகள் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இரு தினங்களுக்கு முன்னணி இப்படத்தில் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சீதக்காதி ஆகிய படங்களில் கலக்கிய ராஜ் குமாரும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் யோகி பாபு, ராஜ் குமார் ஆகியோர் கால்பந்து விளையாடுவது போலவும் புகைப்படம் ஒன்று வைரலாகி இருந்தது.

இது குறித்து தற்போது ராஜ் குமார் விளக்கமளித்துள்ளார். அதாவது நான் தளபதி 63 படத்தில் நடிக்கவில்லை.

வைரலான புகைப்படம் கதிரும் நானும் இணைந்து நடித்து வரும் ஜாடா படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் எனவும் விளக்கமளித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.