Thalapathy 63 Heroine

Thalapathy 63 Heroine : தளபதி 63 படத்தின் நாயகி யார் என்பதை படத்தை தயாரிக்க உள்ள AGS நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் சர்கார் படத்தை அடுத்து அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணி அமைந்துள்ளார்.

இந்த படத்தை AGS நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். படத்தின் நாயகி யாராக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இதற்கு முடிவு தெரிந்துள்ளது. ஆம், தளபதி 63 படத்தின் நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

ஏற்கனவே அட்லீ இந்த படத்தில் நாயகியாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடத்தி வருவதாக வெளியான தகவல்கள் தற்போது உண்மையாகியுள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு நயன்தாரா மீண்டும் விஜயுடன் ஜோடி சேர்ந்திருப்பதால் ரசிகர்கள் இச்செய்தியை உற்சாகத்துடன் கொண்டாட தொடங்கியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.