
Thalapathy 63 Flim : தளபதி 63 படத்தில் மேலும் ஒரு முன்னணி பிரபலம் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது.
தளபதி விஜய் ஏ. ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி உள்ள சர்கார் படம் வசூலில் தொடர் சாதனை படைத்து வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து தளபதி 63 அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளார். AGS நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் நடிகர் விவேக் நடிக்க உள்ளார்.
குருவி படத்தில் இணைந்து நடித்திருந்த விவேக் 10 வருடங்களுக்கு பின்பு மீண்டும் விஜயுடன் இணைந்துள்ளார்.
விவேக்கை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபுவும் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே யோகி பாபு தளபதி விஜயுடன் அட்லீ இயக்கத்தில் வெளியாகி இருந்த மெர்சல், முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி இருந்த சர்கார் என தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தளபதி 63 படத்திலும் யோகி பாபு இணைந்திருப்பது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.