லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கோலிவுட் திரையுலகில் பிரபலம் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் இளைய தளபதி விஜய். இவர் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருடன் இணைந்து ரஷ்மிகா மந்தனா, யோகி பாபு, பிரபு, சரத்குமார், சங்கீதா, ஷாம் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் குறித்து எந்த ஒரு உறுதியான அறிவிப்பும் இதுவரை வெளிவராமல் இருக்கும் நிலையில் இப்படத்தில் இணைய இருக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்போடு இருக்கும் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 5ஆம் தேதி தொடங்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு மூணாரில் நடைபெற உள்ளதாகவும் அதற்காக மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.