தளபதி 67 திரைப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

கோலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், சாண்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படம் குறித்த அப்டேட்களை படகுழு தொடர்ந்து அறிவித்து வரும் நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றி இருக்கும் பிரபல நிறுவனம் குறித்த அப்டேட்டை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தளபதி 67 திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக போஸ்டருடன் தெரிவித்துள்ளது.