தலைவர் 171 படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது வேட்டையன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.  ‌ 

ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு ரஜினிகாந்த் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தலைவர் 171 படத்தில் நடிக்க உள்ளார். 

இந்த படத்தில் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் ஆகியவை என்று 22ஆம் தேதி வெளியாகும் என்று கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. 

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு கழுகு என டைட்டில் வைத்திருப்பதாகவும் படத்தின் டைட்டிலுக்கான டீசர் ஷூட்டிங் விரைவில் தொடங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.