தலைவர் 170 திரைப்படத்திற்கான லுக் டெஸ்டில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டுள்ளார்.

கோலிவுட் திரையுலகின் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவரது நடிப்பில் வரும் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் தலைவர் 170 திரைப்படத்திற்கான அப்டேட் ஒன்று புகைப்படத்துடன் வெளியாகி உள்ளது. அதன்படி ஜெய் பீம் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக இருக்கும் இப்படத்திற்கான டெஸ்ட் லுக் இன்று நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அதில் கலந்து கொண்ட நடிகர் ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படமும் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் நடிகர் ரஜினிகாந்த் தாடியை ட்ரிம் செய்து லைட்டாக ஹேர் கட் செய்திருக்கிறார். அப்புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் ட்ரெண்டிங்காகி வருகிறது.