Rajinikanth Next Projects
Rajinikanth Next Projects
தலைவர் 168 படத்திற்காக ரஜினியுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்க உள்ளாராம் முன்னணி இயக்குனர்களில் ஒருவர்.

Thalaivar 168 Movie Director Details : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தற்போது முதல் முறையாக ஏ.ஆர். முருகதாஸுடன் கூட்டணி அமைத்து தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.

நயன்தார, யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இப்படம் 2020-ல் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்த படத்தை அடுத்து ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.

என்னது வெறும் பத்து நிமிடம் தானா? – ரிலீஸ் நேரத்தில் NKP குறித்து வெளியான ஷாக்கிங் தகவல்.!

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி ரஜினியின் அடுத்த படத்தை ( தலைவர் 168 ) கே.எஸ் ரவிக்குமார் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களது கூட்டணியில் ஏற்கனவே படையப்பா, முத்து என இரு மாபெரும் வெற்றி படங்கள் வெளியாகி இருப்பதால் இந்த கூட்டணியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.