Thalaivar 166

Thalaivar 166 Pooja : தலைவர் 166 படத்தை தொடங்குவதற்கு முன்பாக முருகதாஸ் செய்துள்ள வேலை குறித்த புகைப்படம் இணையத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தை அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். அனிருத் இசையமைக்க உள்ளார்.

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கும் என தகவல்கள் வைரலாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது இயக்குனர் முருகதாஸ் பழனி சென்று படத்திற்காக சிறப்பு பூஜை செய்துள்ளார். அதன் பின்னர் அங்குள்ள குருக்களுடன் பட்டையுடன் பக்தி பயமாக புகைப்படம் ஒன்றை எடுத்து கொண்டுள்ளார்.

அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Murugadoss Thalaivar 166

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.