Thala Vs Thalaivar

Thala Vs Thalaivar Movies : 27 வருடத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரத்தில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வரை தமிழ் சினிமாவில் எவராலும் அடித்து கொள்ள முடியாத அளவிற்கு பாக்ஸ் ஆபீஸ் கிங்காக இருந்து வருகிறார்.

ரஜினியோட மோதி ஜெயிச்சிட்டாரு அஜித் – தயாரிப்பாளரின் அதிரடி பேட்டி.!

இதுவரை மொத்தமாக 165 படங்களில் நடித்துள்ளார். 1992-ல் கமல்ஹாசனின் தேவர் மகன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாண்டியன் படமும் ஒரே நாளில் மோதி கொண்டது.

இதில் கமல்ஹாசனின் தேவர் மகன் படம் சிறப்பான வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முதலிடம் பிடித்தது. அதன் பிறகு தற்போது தல அஜித்தால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஆம், பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வெட்கத்தை விட்டு இப்படி செய்தேன் – பேட்ட குறித்து பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!

தமிழகத்தை பொறுத்தவரை பேட்ட படத்தை விட விஸ்வாசம் படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைத்திருப்பதால் தமிழக வசூலில் தல அஜித் முதலிடம் பிடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

தமிழகத்தை தவிர சென்னை, ஓவர்சீஸ் வசூல்களில் பேட்ட தான் முதலிடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.