Petta Response

Petta Response : ரஜினியை மீட்டதற்கு நன்றி என பிரபல மலையாள நடிகரும் இயக்குனருமான வினித் சீனிவாசன் கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் படங்கள் வெளியானால் ரசிகர்களுக்கு மிக பெரிய கொண்டாட்டமாக இருக்கும்.

ரசிகர்களை போலவே திரையுலக பிரபலங்களும் தங்களை மறந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்களை ரசிப்பார்கள்.

அப்படி தான் தற்போது மலையாள நடிகரும் இயக்குனருமான வினித் ஸ்ரீநிவாசன் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

படு தோல்வியடைந்த படம், சாய் பல்லவி எடுத்த அதிரடி முடிவு.!

தீவிர சூப்பர் ஸ்டார் ரசிகரான இவர் ஒரு போதும் ரஜினி படங்களை பார்க்க மறப்பதில்லை. கடந்த முறை கபாலி பட ரிலீஸின் போதே கூட சென்னைக்கே வந்து படத்தை பார்த்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் சமூக வளையதள பக்கத்தில் இளமையான ரஜினிகாந்தை கடந்த சில படங்களில் பார்க்க முடியவில்லை.

கார்த்தி சுப்புராஜ் தற்போது பழைய ரஜினியை மீட்டு கொண்டு வந்து விட்டார். அவருக்கு நன்றி என கூறியுள்ளார்.

மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு வெட்கத்தை விட்டு விசிலடித்து நடனமாடி படத்தை பார்த்து கொண்டாடினேன் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.