Thala Thalapathy

Thala Thalapathy : ஒரே ஒரு ட்வீட் மூலம் தல அஜித் மற்றும் தளபதி விஜயின் ரசிகர்களை ஒன்று சேர்ந்துள்ளார் பாடலாசிரியர் விவேக்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் என்ற படாலின் மூலம் பிரபலமானவர் பாடலாசிரியர் விவேக்.

இந்த படத்திற்கு பிறகு சர்கார் படத்திலும் இவர் பாடல் எழுதி இருந்தார். மேலும் தற்போது தளபதி 63 படத்திலும் இணைந்துள்ளார்.

இந்நிலையில் இவர் சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் மாறுபட்ட விளையாட்டை விளையாடியுள்ளார்.

அது என்னவென்றால் தல ரசிகர்கள் தளபதி பற்றியும் அவர் நடித்த 3 பேவரைட் படங்களை பற்றியும் ட்வீட் செய்ய கூறியுள்ளார்.

அதே போல தளபதி ரசிகர்கள் தல அஜித்தை பற்றியும் அவர் நடித்த 3 பேவரைட் படங்கள் பற்றியும் ட்வீட் செய்ய கூறியுள்ளார்.

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் ஒற்றுமையுடன் ட்வீட் செய்து வந்துள்ளனர். இது குறித்து தற்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார்.

இதோ அந்த டிவீட்ஸ்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.