Thala 60 Movie Updates : Thala Ajith | H.Vinoth | Kollywood | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Thala 60 Movie Updates :

விவேகம் படத்தை போல தல அஜித் மீண்டும் ரிஸ்க் எடுக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

தல அஜித் நடிப்பில் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. ஹிந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸீ நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முதல் முறையாக ஜெயம் ரவிக்கு ஜோடியான பிரபல நடிகை – JR25 அப்டேட்.!

ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தை அடுத்து மீண்டும் அஜித் எச் வினோத்துடனே தான் கூட்டணியை தொடர உள்ளார்.

மீண்டும் போனி கபூர் தயாரிக்க உள்ள தல 60 திரைப்படம் மிக பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

அஜித்தின் திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் வெளியான திரைப்படம் விவேகம். அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

மீண்டும் விவேகம் படத்தை போலவே தல 60 திரைப்படமும் பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதால் இம்முறையாவது அஜித்திற்கு வெற்றி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.