
Thala 60 : தல அஜித் விஸ்வாசம் படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் தற்போது தல 60 படத்தை பற்றிய சூப்பர் தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
விஸ்வாசம் படத்திற்கு பிறகு தல அஜித் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளார்.
இது ஒரு புறம் இருக்க தல 60 படம் குறித்த தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. ஆம், பில்லா, ஆரம்பம் ஆகிய மெகா ஹிட் படங்களை கொடுத்திருந்த விஷ்ணு வரதன் தான் இயக்க உள்ளாராம்.
விஸ்வாசம் படத்தை வாங்கியுள்ள KJR ஸ்டூடியோஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படம் பாலகுமாரன் எழுதிய சோழர்கள் பற்றிய வரலாற்று கதையாக உருவாக இருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.