நாளை வைகுண்ட ஏகாதசியில், அதர்வா நடித்த ‘டிஎன்ஏ’ டீசர் வெளியீடு..
ஆக்சன் திரில்லராக தோன்றும்படி ‘டிஎன்ஏ’ பட போஸ்டர் இருக்க, நாளைய டீசர் எப்படின்னு பார்ப்போம்..
இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களால் கவனம் ஈர்த்த சுதா கொங்கரா, தற்போது இயக்கவுள்ள ‘எஸ்கே 25’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் அதர்வா.
இதற்கிடையே, அதர்வா ‘டிஎன்ஏ’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், அதர்வா இரட்டை வேடங்களில் வருகை தர, ஜோடியாக நிமிஷா சஜயன் இணைகிறார்.
ஒருநாள் கூத்து, ஃபர்ஹானா ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்தாக இயக்கியிருக்கும் ‘டிஎன்ஏ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம், காதலை மையமாக கொண்ட ஆக்சன் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை ஒலிம்பியா மூவிஸ் அம்பேத் குமார் தயாரித்துள்ளார்.
தற்போது, இப்படத்தின் ஷூட் முழுவதும் முடிந்து, டப்பிங் பணிகளும் நிறைவடைந்தது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தின் டீசர் நாளை (10-ந் தேதி) மதியம் 12.05 மணி அளவில் வெளியாக உள்ளது. இது குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது ‘வைகுண்ட ஏகாதசி’ நாளில் பிறக்கும் டிஎன்ஏ எப்டி இருக்கும்னு பார்ப்போம்..!