TamilNadu Weather Report : Chennai, india, Heavy Rain For Tamilnadu, tamil nadu weather, Interior Tamil Nadu gets heavy rain

TamilNadu Weather Report :

டெல்லி: அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், வங்கக்கடலில் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 5 நாட்களாக பெய்து வரும் கனமழையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா தாலுக்காவில் இன்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அம்மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா தெரிவித்துள்ளார். நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது அங்கு கனமழை பெய்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் அதிகபட்சமாக அவலாஞ்சியில் ஒரே நாளில் இன்று 80 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. உதகையில் 33 செ.மீ., அப்பர்பவானியில் 30 செ.மீ, கூடலூரில் 24 செ.மீ, தேவாலாவில் 21 செ.மீ, நடுவட்டம், எமரால்டில் 18 செ.மீ, க்ளன்மோர்கனின் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தமிழகம் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

சென்னை வானிலை மையம் கூறுகையில், அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாகை மாவட்டம் வேதாரணியத்தில் மீன்வளத்துறை எச்சரிக்கை காரணமாக 5-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பு உள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.