kamala harris
kamala harris

Tamilnadu Lady in America Election : அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹரிஷ் போட்டியிடுகிறார். இவருக்கு வயது 55.

அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபர் மைக் பென்சை எதிர்த்து அவர் தேர்தலில் களம் காண்கிறார். கமலின் தந்தை ஜமைக்காவில் சேர்ந்தவர். அவரின் தாயார் இந்தியாவை சேர்ந்தவர். துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர், முதல் இந்திய அமெரிக்க துணை அதிபர், முதல் ஆப்பிரிக்க அமெரிக்க துணை அதிபர் உள்ளிட்ட பெருமைகள் அவரை வந்து சேரும். அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் களம் காணும் கமலா ஹரிஷ் சென்னையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அவரின் தாய் சியாமளா சென்னையை சேர்ந்தவர், அவரது உறவினர்கள் சென்னையில் வசிக்கின்றனர்.

கமலாவின் தாத்தா டி.வி கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோரின் பூர்வீகம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இந்த தம்பதியின் மூத்த மகள் தான் சியாமளா. இவர் 19 வயது வரை சென்னையில் தான் படித்தார். அதன்பின் ஜமைக்காவை சேர்ந்த டொனால்ட் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

அமெரிக்காவில் பிறந்து அங்கேயே வாழ்ந்து இருந்தாலும் கமலாவிற்கு சென்னையுடன் தொடர்பு விட்டுப் போவதில்லை. தாய் இந்தியாவிற்கு வரும் போதெல்லாம் அவருடன் இந்தியாவிற்கு பயணம் செய்வது கமலின் வழக்கம். எனவே அவர் இந்திய பாரம்பரியத்துடன் வளர்ந்த பெண்தான். பெசன்ட் நகர் கடற்கரையில் நடைப்பயிற்சியின் போது இந்தியாவின் ஜனநாயகத்தை கட்டமைப்பு குறித்து தாத்தாவின் பேச்சுக்களை கேட்டுள்ளார் கமலா.

சென்னையில் கமலாவின் தாயார் சியாமளாவின் சகோதரி மாயா வசித்து வருகிறார். டில்லியில் கலாமின் சகோதரர் பாலு வசிக்கிறார். அமெரிக்காவின் இரு முறை அட்டர்னி ஜெனரலாக இருந்த கமலா ஹரிஜன நாய்கள் கட்சியில் வளரும் நட்சத்திரமாக அறிமுகபடுத்த பட்டுள்ளார். இருப்பினும் தமிழ் பாரம்பரியத்தை மறக்காமல் குடும்ப நிகழ்ச்சியில் புடவை கட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் உறவினர்களுடன் தமிழில் பேசுவார் என்பது அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படி தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக வேண்டும் என்ற ஆசை, அமெரிக்க மக்களிடம் மட்டுமல்ல இந்திய மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.