TamilNadu Achievement in 2020 :

கொரானா அச்சுறுத்தலுக்கு நடுவே தமிழகம் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.

TamilNadu Achievement in 2020 : தமிழகத்தின் தற்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் பொருளாதாரத்தை பின்னணியிலே மாற்ற வேண்டியுள்ளது அதிமுக அரசு தீவிரமாக செயல்படுகிறது.

இந்த 2020-ல் உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தொற்று காரணமாக பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. இருந்தபோதிலும் தமிழகம் நாட்டிலேயே அதிகமான முதலீடுகளை ஈர்த்த மாநிலமாக இடம் பிடித்துள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை முதல் 6 மாதங்களில் இந்திய அளவில் மிக அதிக முதலீடுகளை ஈர்த்த முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 31 ஆயிரத்து 464 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

அதன் பின் அக்டோபர் 12ஆம் தேதி 10 ஆயிரத்து 55 கோடி மதிப்பீட்டில் 14 புதிய தொழில் திட்டங்களை தமிழகத்தில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் பழனிச்சாமி முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன.

மேலும் டிசம்பரில் 24 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

26 ஆயிரத்து 509 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கில் 19 ஆயிரத்து 995 கோடி ரூபாய் மதிப்பில் 18 புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.

27 ஆயிரத்து 324 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் 4 ஆயிரத்து 456 கோடி ரூபாய் மதிப்பில் 5 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

அதேபோல, 47 கோடி ரூபாய் மதிப்பில் 385 நபர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் காமர் ஐடி ஃசோன் என்ற நிறுவனத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

கொரோனா பரவல் காலத்தில் தமிழகம் இவ்வளவு முதலீடுகளை ஈர்த்தது இந்திய அளவில் முக்கியத்துவம் பெறும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

இது தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியை 2021ஆம் ஆண்டில் மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இவை அனைத்திற்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் திட்டங்களை காரணம் என அரசியல் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.