இந்தியாவின் மீண்டும் வளர்த்து வரும் விளையாட்டுகளில் கபடி இப்பொது பெரிதாக பேசப்பட்டு வளர்ந்து வருகின்றது. இதற்கென தனியாக ஆட்கள் பயிற்சியளிக்கப்படுகின்றன.

இந்த ஆண்டு மிகுந்த ஆர்வத்துடன் தொடங்கப்பட்ட புரோ கபடி லீக், இப்பொது தமிழ் ரசிகர்களிடம் அந்த ஆர்வம் குறைந்து வருகின்றது இதற்க்கு காரணம் தமிழ் தலைவாஸ் அணியின் தோல்வி மட்டுமே.

இதுவரை நடந்த போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது.

நேற்று இரவு நடந்த பெங்களூருக்கு எதிரான போட்டியில் மிகவும் மோசமாக போராடி 48-37 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது தமிழ் தலைவாஸ்.

முதல் பாதியில் சமாளிக்கும் வகையில் விளையாடிய தமிழ் தலைவாஸ் இரண்டாம் பாதியில் மொத்தமாக வலுவின்றி ஆடியது.

இருந்தும் தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் 19 புள்ளிகள் எடுத்தும் பயனில்லாமல் போனது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.