Tamil Celebrities in Preganancy

முதல் குழந்தையை பெற்றெடுப்பதற்கு வெயிட்டிங்கில் இருக்கும் தமிழ்த் திரையுலக பிரபலங்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.

Tamil Celebrities in Preganancy : தமிழ் சினிமாவிலும் சின்னத்திரை நடிகைகள் பலர் தற்போது கர்ப்பமாக இருந்து வருகின்றனர். அவர்கள் வெகு விரைவில் தங்களது குழந்தைகளை பெற்றெடுக்க உள்ளனர்.

அந்த வகையில் முதல் கொள்கைக்காக வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கும் தமிழ்த் திரையுலக பிரபலங்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.

மஹத் ராகவேந்திரா – பிராய்ச்சி

மகத் ராகவேந்திராவின் மனைவி பிராய்ச்சி வெகுவிரைவில் தன்னுடைய முதல் குழந்தையை பெற்றெடுக்க உள்ளார். பிராய்ச்சியின் வளைகாப்பு நிகழ்ச்சி சமீபத்தில் சிம்பிளாக நடைபெற்றிருந்தது.

ஸ்ரீதேவி – அசோக் :

சீரியல் நடிகையான ஸ்ரீதேவி தற்போது முதல் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறார். வெகு விரையில் இவர் முதல் குழந்தைக்கு அம்மாவாக இருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் தான் இவருக்கும் வளைகாப்பு நடைபெற்றது.

கீர்த்தி – ஜெய் தனுஷ் :

நந்தினி, சந்திரலேகா விட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் கீர்த்தி. ஜெய் தனுஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது கர்பமாக இருந்து வருகிறார். விரைவில் முதல் குழந்தையை பெற்றெடுக்க உள்ளார்.

ஷாமிலி சுகுமார் – ராஜ்குமார் :

ரோஜா சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் தான் ஷாமிலி சுகுமார். இந்த சீரியல் மட்டுமல்லாமல் வாணி ராணி என பல்வேறு சீரியல்களில் நடித்துள்ள இவர் ராஜ்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவரும் கர்ப்பமாக இருந்து வருவதாக சமீபத்தில் தான் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உஷா – பிரகாஷ் :

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற தீவில் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் உஷா. இவர் பிரகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவரும் 3 மாத கர்ப்பமாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.