Tamil Actors Look Like Persons
Tamil Actors Look Like Persons

அச்சு அசலாக அப்படியே தமிழ் நடிகர்களை போலவே இருக்கும் நபர்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்பது குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Tamil Actors Look Like Persons : தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா என பல நடிகர்களை போல அச்சு அசலாக அப்படியே இருக்கும் நபர்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது என்பது சாதாரணம் ஆகி வருகிறது.

டிக் டாக்கில் தினம் தினம் இது போன்ற ஒருவரை நாம் சந்தித்து வருகிறோம். கீர்த்தி சுரேஷை போலவே இருக்கும் பெண், விஜய், அஜித்தைப் போல அச்சு அசலாக அப்படியே இருப்பவர்களை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.

அதேபோல் நடிகர்களைப் போலவே இருப்பவர்களை ஒட்டுமொத்தமாக அழைத்து விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது.

சாத்தான்குளம் போலீசாரால் கொல்லப்பட்ட பென்னிஸ்ஸின் கடைசி டிக் டாக் வீடியோவை வெளியிட்ட பிரபலம் – கண் கலங்க வைக்கும் வீடியோ இதோ

அந்த நிகழ்ச்சியின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் வடிவேலு வரை அப்படியே நடிகர்களைப் போலவே இருக்கும் அவர் கலந்து கொண்டுள்ளனர்.

கலந்துகொண்டது மட்டுமல்லாது அவர்களைப் போலவே நடித்தும் காட்டி உள்ளனர். இந்த வீடியோ தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதோ நீங்களும் பாருங்கள்