நடிகை தமன்னாவை பேட்டி எடுக்க வந்த ஊடகத்தினரை கடுமையாக பேசி சண்டையிட்ட தமன்னாவின் பவுன்சர்சின் பரபரப்பான வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக ஜொலிப்பவர் தான் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானவர். தமிழில் இவர் கடைசியாக ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்து கலவையான விமர்சனங்களை பெற்றிருந்ததை தொடர்ந்து நடிகை தமன்னா தற்பொழுது பிறமொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில் தற்போது வெளியாக இருக்கும் திரைப்படம் தான் “பப்ளி பவுன்சர்”.

ஊடகத்தினரிடம் கடுமையாக நடந்து கொண்ட தமன்னாவின் பவுன்சர்ஸ்!!… வெளியான பரபரப்பான வீடியோ வைரல்!.

இப்படத்தை மதுர் பண்டர்க்கார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் தமன்னா உடன் சவுரப் சுக்லா, அபிஷேக் பஜாஜ் மற்றும் சாஹில் வைத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கதை மற்றும் திரைக்கதையை அமித் ஜோஷி, ஆராதனா தேப்நாத் மற்றும் மதுர் பண்டர்கார் எழுதி உள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் வெளியாக உள்ளது என்று படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஊடகத்தினரிடம் கடுமையாக நடந்து கொண்ட தமன்னாவின் பவுன்சர்ஸ்!!… வெளியான பரபரப்பான வீடியோ வைரல்!.

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் “பித்து புடிச்சு” என்கின்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் பிரமோஷனுக்காக ஹைதராபாத்திற்கு வந்துள்ள தமன்னாவை ஊடகத்தினர் புகைப்படம் எடுப்பதற்காக அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு நடிகை தமன்னாவின் பவுன்சர்கள் மறுப்பு தெரிவித்து ஊடகத்தினரை அவதூறாக பேசியதோடு, தாக்கவும் முயற்சி செய்து கடுமையாக நடந்து கொண்டுள்ளனர். இந்த பரபரப்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.