ரஜினி குறித்து தமன்னா அளித்திருக்கும் சமீபத்திய பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை தமன்னா. ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் தற்போது ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் அனிருத் இசையமைப்பில் இடம்பெற்று இருந்த காவாலா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடிய தமன்னாவின் வீடியோ ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து இணையதளத்தை தெறிக்க விட்டு வருகிறது. இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற திரைப்பட நிகழ்வு ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் குறித்த சர்ச்சைக்குரிய கேள்விக்கு தமன்னா அளித்திருக்கும் பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.
அதாவது அப்பேட்டியில், ரஜினிக்கும் தமன்னாவிற்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகை தமன்னா, “திரையில் நடிக்கும் கலைஞர்களின் திறமையை மட்டுமே நாம் பார்க்க வேண்டும். அவர்களது வயதை பார்க்கக் கூடாது. நான் 60 வயதில் கூட அசத்தலான நடனங்களை ஆட விரும்புகிறேன். என்று கூறியிருக்கிறார். மேலும் ரசிகர்களுக்கு எப்போதுமே ரஜினி மாஸ் தான். என்றும் சர்ச்சையான கேள்விக்கு சாதுரியமாக பதிலளித்திருக்கிறார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.