காவாலா பாடலுக்கு கிடைத்த வரவேற்பு குறித்து நடிகை தமன்னா வெளியிட்டு இருக்கும் நெகிழ்ச்சி பதிவு வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்தில் இருந்து அனிருத் இசையமைப்பில் இடம்பெற்றிருக்கும் பாடல்களில் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலாக தமன்னாவின் கவர்ச்சி நடனத்தில் உருவாகி இருந்த காவாலா பாடல் வெளியானது.

பட்டி தொட்டி எங்கும் சூப்பர் ஹிட் அடித்து பிரபலமாகி இருக்கும் இப்பாடல் தொடர்ந்து ரசிகர்களால் ரீல்ஸ் செய்யப்பட்டு இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் காவாலா பாடலுக்கு ரிலீஸ் செய்துள்ள குழந்தைகளின் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் தமன்னா அதில், “காவலா பாடலுக்கு நீங்கள் அனைவரும் அளித்துள்ள அன்பு என் மனதை நிறைவு செய்துள்ளது. என் உழைப்பிற்கான அங்கீகாரம் இது, உங்களின் அன்பும் ஆதரவும் எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி. எனக் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார். இவரது இந்த பதிவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.