ஹிந்தியில் வெளியிடப்பட் காவாலா பாடலுக்கு அந்நிகழ்ச்சியில் நடனமாடிய தமன்னாவின் வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தமன்னா. ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவர் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் காவாலா என்னும் பாடலில் தமன்னா கவர்ச்சி நடனம் ஆடி அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்தார். இப்பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகி அனைவரையும் ரீல்ஸ் செய்ய வைத்து இணையதளத்தை பயங்கரமாக அதிர விட்டு வருகிறது.

இந்நிலையில் இப்பாடல் ஹிந்தியில் ‘து ஆ தில்பாரா’ என நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. இதற்காக மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த தமன்னா மேடையில் அப்பாடலுக்கு மகிழ்ச்சியுடன் நடனம் ஆடியுள்ளார். அதன் வீடியோவை ஜெயிலர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.