Swapna Gold Kidnap
Swapna Gold Kidnap

Swapna Gold Kidnap : அண்மையில் தங்க கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா, கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை ஆவார்

இவர் வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளை செய்யும் நடிகர் நடிகைகளை அழைத்து செல்லும் வேலையை செய்து வந்த நிலையில் அங்கிருந்து தங்கத்தை இந்தியாவிற்கு கடத்தி வரும் செயலையும் சேர்த்து செய்துள்ளார்.

இதனை மோப்பம் பிடித்த பொலிசார், தங்க கடத்தல் சொப்பன சுந்தரியை கைது செய்ததுடன் அவருக்கு துணை போனவர்களையும் கூண்டோடு கைது செய்தனர்.

விஷால் மற்றும் அவர் தந்தைக்கு கொரானா உறுதி – உண்மையை மூடி மறைத்த பத்திரிக்கைகள்

இந்த சூழ்நிலையில் சிபிஐ விசாரணையில், இவர் கடத்திய நகையை வாங்கிய திருச்சியை சேர்ந்த பிரபலமும் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நபருக்கு அரசியல் செல்வாக்கும் பணபலமும் இருப்பதால் அவரது பெயர் வெளியில் வராமல் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன.

மேலும் அவர் தனது பெயர் வெளிவராமல் இருக்க போலீசாரிடம் கெஞ்சி உள்ளாராம். ஆனால் போலீசார் தரப்பில் இதனை மறுத்து, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டனை வாங்கி தரப்படும் என்கின்றார்கள்.