
திடீரென தள்ளி போயுள்ளது சூர்யாவின் சூரரை போற்று இந்தி ரீமேக்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் சூரரை போற்று. சூப்பர் ஹிட்டான இந்த திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது.

இந்தி ரீமேக்கில் சூர்யாவுக்கு பதிலாக முதன்மை கதாப்பாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்க அவருடன் இணைந்து நடிகர் சூர்யாவும் நடித்து வருகிறார். இதன் மூலம் பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுத்த சூர்யா தொடர்ந்து கவனம் செலுத்த மும்பையில் குடியேறினார்.
இந்த படத்தின் ரிலீஸ் அடுத்த வருட பிப்ரவரிக்கு தள்ளி போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்த படத்தினை எதிர்பார்த்து வந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
