தேனியை சேர்ந்த Muscle Dystrophy நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் தினேஷ் வரைக்கலையில் நிபுணத்துவம் பெற்றவன். எல்லோரையும் ஊக்குவிக்கும் வகையில் அவர் சிறப்பாக செயல்பட்டுவருகிறார்.

பலருக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தினேஷுக்கு  நடிகர் சூர்யாவை சந்தித்து பேச வேண்டும் என்பது அவரின் ஆசை. இதை  தனியார் தொலைக்காட்சியின் பேட்டியில் சமீபத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

இதை அறிந்த சூர்யா நற்பணி மன்ற நிர்வாகிகள் தினேஷை அழைத்து வந்து சென்னையில் சூர்யாவை சந்திக்க வைத்தனர்.

அப்போது சூர்யாவுடனிருந்த சூர்யாவின் தந்தை சிவகுமார் மற்றும் சகோதரர் கார்த்தி ஆகியோர் அவரை சந்தித்து பேசினர். 
சிறுவனிடம் சூர்யா கூறியது :-
நீங்கள் உள்நெஞ்சத்திலிருந்து என்ன நினைக்கிறீர்களோ , நம்புகிறீர்களோ  அல்லது கனவுகாண்கிறீர்களோ   அது கண்டிப்பாக நினைவாகும். பெரிதாக கனவு காணுங்கள் ஒரு போதும் கனவு காண்பதை நிறுத்தாதீர்கள் என்று சிறுவன் தினேஷிடம் சூர்யா கூறியுள்ளார்.