மாபெரும் வெற்றி இயக்குனருடன் கைகோர்க்கிறார் நடிகர் சூர்யா.

Suriya With Sudha Kongara Movie : தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த படத்தை தொடங்கி சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தில் தன்னுடைய சொந்தத் தயாரிப்பு பாலா இயக்கத்தில் உருவாக உள்ள படத்திலும் நடிக்கிறார். பாலா இயக்கும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக சூர்யாவை வைத்து சூரரைப் போற்று என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த சுதா கொங்கராவுடன் மீண்டும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இந்தப்படம் சூரரைப்போற்று படத்தை போல வரலாற்று படமாக இல்லாமல் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருக்க வேண்டும் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக சிந்தனை உள்ள படமாக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.