Suriya Salary for Vadivasal Movie

வாடிவாசல் படத்திற்காக சூர்யா வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

Suriya Salary for Vadivasal Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு கிராமத்து கதை கொண்ட படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாக உள்ள படத்திற்காக ரூபாய் 35 கோடி சம்பளமாக வாங்க இருப்பதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

வெற்றிமாறன் தற்போது சூரியை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.