Suriya Role in Gnanavel Movie

அஜித்துக்கு அடுத்ததாக சூர்யா வழக்கறிஞராக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Suriya Role in Gnanavel Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தினை தொடர்ந்து சூர்யா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்றுதான் ஞானவேல் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்து வரும் சூர்யா 39.

இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா கெஸ்ட் ரோலில் தான் நடித்து வருகிறார். ஆனால் இந்த கதாபாத்திரம் படத்தின் மிக முக்கியமானதாக நீண்ட கதாபாத்திரமாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது சூர்யா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

பழங்குடி மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞராக சூர்யா இத்திரைப் படத்தில் நடித்திருப்பதாக கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. சூர்யா ரசிகர்களுக்கு நிச்சயம் பெரிய சர்ப்ரைசாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.