சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ திரைப்படம் எப்போது ரிலீஸ்?

Web Ads

சூர்யா நடித்து வரும் திரைப்படங்களின் தகவல்கள் காண்போம்..

சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் ரிலீஸாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

காரணம், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என சொல்லப்பட்டது. மாஸான பக்காவான ஒரு கமர்ஷியல் படமாக ‘கருப்பு’ தயாராகி இருப்பதால், இப்படத்தை பண்டிகை நாட்களில் ரிலீஸ் செய்தால் சரியாக இருக்கும் என தயாரிப்பாளர் கூறினார்.

அதைத்தொடர்ந்து அக்டோபர் மாதம் தீபாவளியை முன்னிட்டு ‘கருப்பு’ வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என சொல்லப்பட்டது. அந்நாளில் விஜய்யின் ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய படங்கள் ரிலீசாகின்றன.

இதனால் ‘கருப்பு’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என்றே தெரிகின்றது. அவ்வகையில், இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் 14-தேதேதி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே நடிகரின் ஒரு படத்தின் ரிலீசுக்கும் அடுத்த படத்தின் ரிலீசுக்கும் குறைந்தது இரண்டு மாதமாவது இடைவேளை இருந்தால் சிறப்பு. இந்தாண்டு அஜித் நடிப்பில் அவ்வாறே இரண்டு படங்கள் வெளியாகின. பிப்ரவரி மாதம் விடாமுயற்சி படம் வெளியான நிலையில், இரண்டு மாதங்கள் கழித்து ஏப்ரலில் குட் பேட் அக்லி ரிலீசானது. அதுபோல, அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் ‘கருப்பு’ திரைப்படம் வெளியானால், சில மாதங்கள் தள்ளி ‘சூர்யா 46’ வெளியாகலாம் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.!

suriya next two movies karuppu and suriya 46 release issues
suriya next two movies karuppu and suriya 46 release issues