Suriya Next Films
Suriya Next Films

Suriya Next Films – நடிகர் சூர்யா முதல் முறையாக பெண் இயக்குனருடன் இணைய உள்ளார். இந்த படத்தை பற்றிய அப்டேட்கள் தற்போது கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூரியா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்திலும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இதன் மூலம் சூரியா முதல் முறையாக பெண் இயக்குனருடன் இணைய உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மார்ச் மாதத்தில் தொடங்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.