சூர்யா & ஜோதிகாவின் லேட்டஸ்ட்டான புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் 3டி தொழில்நுட்பத்துடன் 10 மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் உள்ளிட்டவைக்காக ரசிகர்கள் வெகு நாட்களாக மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் மலேசியாவில் குடும்பத்துடன் தங்கி இருக்கும் நடிகர் சூர்யா அவரது மனைவியும் பிரபல முன்னணி நடிகையுமான ஜோதிகாவுடன் இணைந்து எடுத்திருக்கும் ரீசன்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் ட்ரெண்டிங்காகி வருகிறது.