Suriya in Vaadivasal Fan-made Poster
Suriya in Vaadivasal Fan-made Poster

சூர்யாவின் பிறந்த நாளான இன்று வாடிவாசல் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.ஆனால் இது படக்குழு வெளியிட்டது அல்ல. ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர்.

Suriya in Vaadivasal Fan-made Poster : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் இன்று தன்னுடைய நாற்பத்தி ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடி வருவதால் திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

சூர்யாவின் பிறந்தநாள் கிப்ட் ஆக இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப்போற்று படத்திலிருந்து காட்டுப்பயலே என்ற பாடலின் ஒரு நிமிட வீடியோ வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ரசிகர்களுக்கு காத்திருக்கும் மெகா ட்வீட்.. சூர்யாவின் அடுத்த படம் பற்றி வெளியான மாஸ் அப்டேட்!

இந்த நிலையில் சூர்யா ரசிகர்கள் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள வாடிவாசல் படத்தின் போஸ்டர் ஒன்றை உருவாக்கி அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.