சூரரை போற்று திரைப்படத்திற்காக சூர்யாவின் செயல் பலரையும் பிரம்மிக்க வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்துள்ளார்.

நேற்று இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பையும் அப்பப்பா எத்தனை கெட்டப்? என பலரையும் வியக்க வைத்தது.

இந்த படத்தில் யங் லுக்கில் காட்சி அழிப்பதற்காகவே சூர்யா கடுமையான டயட் இருந்து கிட்டத்தட்ட 20 கிலோ எடையை குறைத்துள்ளாராம்.

அவர் எடையை குறைத்து எடுக்கப்பட்ட காட்சியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. எடையை குறைப்பதற்காக சூர்யா வெள்ளரிக்காயை மட்டுமே சாப்பிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஒரு படத்திற்காக சூர்யா இப்படியோர் டயட் எடுத்திருக்கும் சூர்யாவை ரசிகர்கள் நடிப்பின் நாயகன் என கொண்டாடுவதில் தவறே இல்லை.

Soorarai Pottru Suriya