Aparna Balamurali
Aparna Balamurali

Aparna Balamurali : சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் சூரரைப் போற்று.

இப்படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் இவர்களுடன் இணைந்து, சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்.

இப்படத்தின் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம் படங்களில் நாயகியாக நடித்தவர்.

தொடர்ந்து முன்னணி ஹீரோயின்களுடன் நடித்த சூர்யா தற்போது இவருடன் இணைந்திருப்பது அவருடைய ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

இந்நிலையில் சூர்யா குறித்து தன்னுடைய சமுக வலைதள பக்கத்தில் பேசிய அபர்ணா, “எனக்கு நடிப்பு சரியாக வரவேண்டும் என்பதற்காக சூர்யா தினமும் எனக்கு முன்பு வந்து ரிஹர்சல் செய்வார்.

ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்துகொண்டு அவர் இதெல்லாம் செய்யவேண்டிய அவசியமே இல்லை” என்று அபர்ணா நல்லவிதமாக தான் கூறியிருந்தார்.

ஆனால் சூர்யாவை அவர் எப்படி சூப்பர் ஸ்டார் என்று கூறலாம் என ஒரு குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.