நடிகை அதிதி சங்கர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட தொழில்நுட்பத்துடன் உருவாகி வரும் கங்குவா திரைப்படம் வெளியாக உள்ளது. பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அண்மையில் இப்படத்திலிருந்து சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படம் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக நடிக்க இருக்கும் சூர்யா 43 திரைப்படம் தொடர்பான அப்டேட் வெளியாகி உள்ளது.

அதாவது, நடிகர் சூர்யா அடுத்ததாக, இயக்குனர் சுதா கொங்குரா இயக்கத்தில் உருவாக போகும் “சூர்யா 43” திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க இருக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகி வைரலான நிலையில் தற்போது இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை அதிதி சங்கரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக புதிய தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.