சூர்யா 42 திரைப்படத்தின் நியூ அப்டேட்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து சூர்யா உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற சிறு கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

சூர்யா 42 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!!… வெளியான ரீசன்ட் அப்டேட் வைரல்.!

இந்த படங்களை தொடர்ந்து சூர்யா அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். வரலாற்றுக் கதையில் 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா 42 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!!… வெளியான ரீசன்ட் அப்டேட் வைரல்.!

இப்படியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போதைய படப்பிடிப்பு நிலவரம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி வனப்பகுதியில் எடுக்க வேண்டிய காட்சிகளுக்காக சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரவில் இப்படத்திற்கான படப்பிடிப்பை படகுழு மேற்கொண்டு வருவதாக புதிய தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.