Suriya 38 : சூர்யாவின் அடுத்த படம் குறித்த அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK, கே.வி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் என இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

தல 60 இயக்குனர் சிவா தானா? – அஜித் தரப்பில் இருந்து வெளியான அறிவிப்பு.!

இந்த படங்களை தொடர்ந்து யாருடன் இணைவார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வந்த நேரத்தில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூரியாவும் சிவாவும் இணைய இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இதன் படப்பிடிப்புகள் வரும் ஜூன் மாதம் முதல் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல தொகுப்பாளிக்கு மீண்டும் திருமணம் – விஜய் டிவி செய்த வேலையை பாருங்க

இதனால் சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். இது குறித்த அறிவிப்பும் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Suriya 38

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.