இமயமலையிலிருந்து நடிகர் ரஜினிகாந்தின் போட்டோஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்திய திரையுலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவரது நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத்
இசையமைத்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வசூல் வேட்டையாடி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இப்படம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளம் முழுவதும் வைரலாகி வரும் நிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சில தினங்களுக்கு முன்பு இமயமலைக்கு சென்று இருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.