எவ்வளவு பிசியாக இருந்தாலும் இதை செய்து விடுவேன்.. ரஜினிகாந்த் எமோஷனல் பேச்சு.!!

எவ்வளவு பிஸியாக இருந்தாலும் இதை செய்து விடுவேன் என ரஜினிகாந்த் பேசி உள்ளார்.

super star rajinikanth latest speech update
super star rajinikanth latest speech update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது இந்த படத்திற்கான படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தப் படத்தை தொடர்ந்து தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் கோயம்புத்தூரில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 1975 முதல் 1979 ஒன்பதாம் ஆண்டு வரை படித்த மாணவர்களின் பொன் விழா சந்திப்பு நடைபெற்றது.

இதில் காணொளியில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ன வேணும்னாலும் கிடைக்கும் ஆனால் பழைய ஃப்ரெண்ட்ஸ் எப்பவும் கிடைக்க மாட்டாங்க.. என்னை எப்பவுமே மாமா மச்சான் என்னங்க வாங்க தாத்தா போங்க என்று பேசுவதை விட டேய் வாடா எங்கடா இருக்க எப்படிடா இருக்க என்று பேசுவது தான் ரொம்ப சந்தோஷம் என்றும் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை நண்பர்களை சந்தித்து விடுவதாகவும் கூறி இருக்கிறார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

super star rajinikanth latest speech update
super star rajinikanth latest speech update