“சூப்பர் ஸ்டார் ஹிட்ஸ்”கிட்டார் வெல்லப்போகும் குழந்தை யார்? சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 சிறப்பு சுற்று..!
சூப்பர் ஸ்டார் ஹிட் சுற்றில் கிட்டார் வெல்லப்போகும் குழந்தை யார் என்று பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் ஸ்டார் ஜூனியர் சீசன் 10.இந்த நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கி ஆறு முதல் 15 வயதிற்குள்ளான குழந்தைகள் கலந்து கொண்டு பாடி வருகின்றனர் இந்த நிகழ்ச்சியில் பாடும் ஏராளமான பாடகர்களை உலகமே திரும்பிப் பார்க்கும் நிலைக்கு அவர்களின் புகழ் உச்சிக்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக மனோ, சின்னக்குயில் சித்ரா மற்றும் இசையமைப்பாளர் டி.இமான் இருந்து வருகின்றனர்
இந்நிலையில் டிசம்பர் 12ஆம் என பல தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு ரவுண்டு சூப்பர் சிங்கர் மேடையில் அரங்கேற உள்ளது.
அதாவது டிசம்பர் 7ஆம் தேதி எட்டாம் தேதி ஒளிபரப்பாகும் சூப்பர் ஸ்டார் ஹிட்ஸ் ரவுண்டில் குழந்தைகள் சூப்பர் ஸ்டார் ஹிட் பாடல்களை பாட உள்ளனர் அதில் சிறப்பாக பாடும் ஒரு குழந்தைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கையெழுத்திட்ட கிட்டார் பரிசாக காத்திருக்கிறது அந்த அதிர்ஷ்டசாலி யார்?அதை வெல்லப்போகும் குழந்தை யார் என்பதை சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 பார்த்து தெரிந்து கொள்வோம்.