வெகு விரைவில் சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் ஒன்று முடிவுக்கு வர இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒவ்வொன்றிற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உண்டு.

அதிலும் குறிப்பாக ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒவ்வொன்றும் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றன.

இப்படி இருக்கையில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் வெகு விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது.

கார்த்தியின் பித்தலாட்டம் முருகன் மாமா உட்பட எல்லோருக்கும் தெரிந்து விட்டது இன்னும் அனு மட்டுமே பாக்கி. கூடிய விரைவில் அணுவுக்கும் கார்த்திக் குறித்த விஷயங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை அப்படி தெரிய வந்தால் சீரியல் கிளைமாக்ஸ் நெருங்கி விடும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் சுந்தரி சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.