சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா பதிவிட்டிருக்கும் ஸ்டைலிஷ் லுக் போட்டோ ஷூட் புகைப்படங்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக விளங்கும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் தொடரில் சுந்தரியாக நடித்து அனைவருக்கும் பரிச்சயமானவர் நடிகை கேப்ரில்லா. ஆரம்பத்தில் சில ரியாலிட்டி ஷோக்கள் மூலம் தனது பயணத்தை தொடங்கிய இவர் தற்போது இத்தொடரில் கதாநாயகியாக நடித்து பல இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

இதற்கிடையில் வெள்ளி திரையிலும் ஒரு சில படங்களில் நடித்து வரும் இவரை ரசிகர்கள் இதுவரை புடவை, சுடிதார் மற்றும் தாவணியில் மட்டுமே பார்த்திருப்பார்கள். ஆனால் தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகை கேப்ரில்லா பகிர்ந்து இருக்கும் மாடர்ன் டிரஸ் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்.