பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த சுந்தர்.சி..!
பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்துள்ளார் சுந்தர் சி.

தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். சுந்தர் சி சமீபத்தில் அவரது இயக்கத்தில் அரண்மனை 4 என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.நீண்ட வருடங்களுக்குப் பிறகு வெளியான மதகஜராஜா திரைப்படம் வசூலை வாரி குவித்தது.
மேலும் தற்போது கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் சில நாட்களுக்கு முன் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிலையில் சுந்தர் சி அவரது 25 ஆவது திருமண நாள் என்பதால் பழனி முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்து சுந்தர் சி மொட்டை அடித்துள்ளார். சுந்தர்சியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு திருமண நாள் குறித்து நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டு உள்ளார் குஷ்பூ.
இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram